ஆங்கிலத்தில் பேசுவது எப்படி?
1.ஆங்கிலத்தில் பேசுவது எப்படி? பலருக்கும் ஆங்கிலத்தில் பேசுவது குறித்து பெரும் தயக்கம் உள்ளது. எப்படித் தொடங்குவது? என்ன பேசுவது? ஆங்கில மொழியில் தவறு நேர்ந்துவிட்டால் அவமானமாயிற்றே என்ற எண்ணம் அந்த மொழியைச் சரியாக அறிந்துகொள்வதில் கூட தடுமாற்றத்தைக் கொடுத்துவிடுகிறது. அதனால் இன்று முதல் அடிப்படையிலிருந்து ஆங்கிலத்தைக் கற்பதற்கான பயிற்சிக்குரிய பதிவுகளை எழுத எண்ணியிருக்கிறேன். பொதுவாக ஆங்கிலத்தில் எப்படி பேசத் தொடங்குவது, எந்த இடத்தில் தயக்கம் வரும், எந்தச் சொல்லை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதோடு சிறிய பயிற்சிகளும் செய்யும்படியான பதிவாக இது இருக்கும். ஒரு மொழியைக் கற்க விருப்பமுள்ளவர்களும் உழைத்தால்தான் அதில் பயன் பெற முடியும். அதனால் இந்தப் பதிவைப் படித்துவிட்டு அதைத் தொடர்ந்து பயிற்சி செய்தால் ஆங்கிலத்தைப் பேசுவதற்கான துணிவு உண்டாகும். மேலும் இந்தப் பதிவில் ஆங்கில இலக்கியங்களையும் அறிமுகப்படுத்தும் எண்ணம் உண்டு. எனவே முழுமையாக ஆங்கில மொழி, இலக்கியம் என்று ஆங்கிலத்தை ஒட்டு மொத்தமாக அறிவதற்கான தொடராக இது அமையும். நம்மில் பலருக்கு ஒருவரிடத்தில் ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்கு...